அரிசியை விட பலமடங்கு சத்துக்களை கொண்ட வெள்ளை சோளம் !!
வெள்ளை சோளத்தில் இருக்கும் அதிகபடியான நார்சத்து இரத்தத்தை சுத்தப்படுத்தி இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
வெள்ளை சோளத்தில் நார் சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கின்றது. உடல் எடை அதிகம் ஏராமல் பாதுகாக்கின்றது.
வெள்ளை சோளத்தில் போதுமான அளவு நோயை எதிர்த்து போராடும் ஆண்டி ஆக்சிடன்ட் இருக்கின்றது. இதனால் வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாக்கிறது.
குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் வெள்ளை அனுக்களை எதிர்த்து போராடும். இதனால் குறைந்த இரத்தம் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், அலர்ஜி போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
சோளத்தில் அதிகமான நார்சத்தும் மற்றும் மாவுசத்தும் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய வைக்கின்றது. தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் செள்ளை சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது.