சரும பராமரிப்பில் நல்லெண்ணெய்யின் பங்கு என்ன...?
நல்லெண்ணெய் சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது, முகப்பரு மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைத் தடுக்கும். அதற்கு தினமும் 1 டீஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பஞ்சில் தொட்டு பருக்கள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து கழுவுங்கள்.
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். பின் அதை முகம், கை, கால்களில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.இப்படி தினமும் பயன்படுத்தி வருவதால், சருமம் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.
நல்லெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவிக் கொள்ளுங்கள். ஆனால் நல்லெண்ணெயைப் பயன்படுத்திய உடனேயே பலன் கிடைக்காது. தினமும் பயன்படுத்தி வந்தால் தான் பலனைக் காண முடியும்.
கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கை வழியில் மேக்கப்பை நீக்க நினைத்தால், நல்லெண்ணெய்யைப் பயன்படுத்துங்கள். அதுவும் பஞ்சுருண்டையில் நல்லெண்ணெய்யை நனைத்து, முகத்தை தினமும் துடைத்து எடுங்கள். இப்படி தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மேக்கப் முழுமையாக நீங்குவதோடு, சருமமும் வறட்சியடையாமல் இருக்கும்.