செவ்வாய், 6 ஜூன் 2023
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala
Last Modified சனி, 24 செப்டம்பர் 2022 (11:54 IST)

சரும வறட்சியை நீக்கி முகத்திற்கு பொலிவை தரும் வாழைப்பழம் !!

வாழைப்பழத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. இது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். சருமத்தில் ஈரப்பதத்தை அளிக்கும் தன்மை வாழைப்பழத்திற்கு உள்ளது. இது சரும சுருக்கங்களை தவிர்க்க பயன்படுகிறது. மேலும் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவுகிறது.


வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் வறண்ட சருமம் மற்றும் உலர்ந்த கூந்தலை சரிசெய்கிறது.

ஒரு கிண்ணத்தில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை எடுத்து பிசைந்து கொள்ளவும். பிறகு முகத்தில் கண்களைத் தவிர பிற பகுதிகளில் நேரடியாக தடவவும். சுமார் 20 நிமிடங்கள் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்.

பழுத்த வாழைப் பழம் ஒன்றை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். அதில் காய்ச்சாத பால் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து முகத்தில் கருமை படிந்த இடத்தில் தடவுங்கள். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

வாழைப்பழம் ஒன்றைக் கூழாக்கி இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக் கரு கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவி விடுங்கள். தோலின் கருமை மட்டுமில்லாமல், கண்ணைச் சுற்றி உள்ள கரு வளையமும் காணாமல் போகும்.

நன்கு பழுத்த வாழைப் பழத்தை பிசைந்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சைச் சாறு மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு கலந்து முகத்தில் பூசி காய்ந்த பிறகு கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால் தோலின் கருமை மற்றும் கண்ணைச் சுற்றி உள்ள கருவளையமும் நீங்கும்.