செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

துத்தி மூலிகையை பயன்படுத்தி என்னென்ன நோய்களுக்கு தீர்வு காணலாம்...?

துத்திக் கீரைகளை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் நாட்பட்ட மலச்சிக்கல் தீரும்.

முகப்பருக்கள் ஏற்படுவதால் முகத்தின் அழகு கெட்டு விடுகிறது இப்படிப்பட்டவர்கள் துத்தி செடி வேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெயில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களின் மீது தடவினால் முகப்பருக்கள் நீங்கி விடும்.
 
துத்திப் பூக்களை ஒரு கைப்பிடியளவு சேகரித்து, பசும்பாலில் போட்டுக் மிதமான பதத்தில் காய்ச்சி சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், உடல் வெப்பம் தணிந்து, தாது விருத்தி ஏற்படும். விந்து உற்பத்தி அடர்த்தியாகும்.
 
மூல நோய்க்கு சிறந்த மூலிகை மருந்தாக துத்தி இருக்கிறது. துத்தி இலைகளை நிழலில் காயவைத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, அப்பொடியைக் காலை மாலை இருவேளை ஒரு தேக்கரண்டித் தூளைச் சாப்பிட்டு, சுடு தண்ணீர் குடித்து வந்தால் மூலம், ரத்த மூலம், உள் மூலம், மூலப் புண்கள், மூலக் கடுப்பு மற்றும் நமைச்சல் முதலிய மூலம் சம்பந்தமானஅனைத்து பிணிகளும் அகலும்.
 
துத்தி இலைகளை இடித்துச் சாறு தயாரித்து அதற்குச் சமமாக நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அஜீரணத்தால் ஏற்பட்ட வயிற்றுப் போக்கு குணமாகும்.