புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் எடையை அதிகரிக்கும் வழிகள் என்ன...?

உடல் எடையை குறைக்க பலரும் படாதபாடு படுவதை பார்த்திருப்போம். அதே போல உடல் எடையை அதிகரிக்க முடியாமல் ஒரு சிலர் தவித்து வருகின்றனர். 

உடல் எடையை அதிகரிக்க இவர்கள் எந்த உணவை சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பதை ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள். சைவ உணவுகளை  சாப்பிடுபவர்கள் உடல் எடையை அதிகரிக்க வழி தெரியாமல் இருக்கின்றனர்.
 
உடல் எடையை அதிகரிக்க வழக்கமாக உட்கொள்ளும் கலோரி அளவை காட்டிலும் அதிகமான அளவு கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது நெய் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டுமே அதிக அளவு கலோரிகளை கொண்ட உணவு பொருட்கள்  ஆகும்.
 
உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் தங்கள் உடலின் கலோரிகள் தேவையை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். சதை பிடிப்பதற்கு உருளைக்கிழங்கு ஒரு  சிறந்த உணவு. உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான சத்தை தருகிறது.
 
நட்ஸ் மற்றும் விதைகளில் புரதச்சத்து நிறைந்து இருப்பதால் உடலுக்கு தேவையான கலோரிகளை தருகிறது. முக்கியமாக வால்நட், பாதாம், பூசணி விதைகள்  போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் ஆரோக்கியமான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.
 
இதில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கைப்பிடி உட்கொண்டால் உடலில் ஆரோக்கியமான கலோரிகள் சேர்வதோடு, நார்ச்சத்தும் தேங்கும். மேலும் உடலில்  உள்ள கேட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை அதிகரிக்கும்.
 
உடல் எடை வேகமாக கூட வேண்டுமெனில், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 வாழைப்பழங்கள் சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள கலப்புசீனியும், பழவெல்லமும் உடனடி சக்தியை அளிப்பதோடு, உடல் எடையையும் அதிகரிக்கும்.
 
தினமும் உணவில் வேர்க்கடலை வெண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் அதில் உள்ள நல்ல கொழுப்பால், உடல் எடை அதிகரிக்கும்.