உடலுக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலையில் உள்ள சத்துக்கள் என்ன....?

நமது சமையலில் முக்கிய இடம்பிடிப்பது கருவேப்பிலை. ஆனால் நாம் அதன் அருமை தெரியாமல் கருவேப்பிலையை ஒதுக்குகின்றோம். இப்பொழுது ஏன் கருவேப்பிலையில் என்னென்ன ஆரோக்கிய நன்மை உண்டு என்பதை பார்ப்போம்.
கறிவேப்பிலையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. கறிவேப்பிலை உண்ணும்பொழுது உங்களின்  எலும்புகள் மற்றும் பற்கள் வலிமை பெரும்.
 
கறிவேப்பிலையில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நமது செரிமான ஆரோக்கியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிக  மிக முக்கியம்.
 
தினமும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்து வந்தால் உங்களுக்கு நரைமுடி, முடி கொட்டுதல், முடி உடைதல் போன்ற பிரச்சினை  ஏற்படாது. மேலும் உங்களின் முடி வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும்.
 
இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று இரத்த சோகை நோய் ஆகும். எனவே தினம் 10  கறிவேப்பிலையினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கும்.
 
கறிவேப்பிலையில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை உண்டு வந்தால் உங்களுக்கு நரை முடி, செல் அழிவு, விரைவில் வயதான தோற்றம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
 
தினம் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலை இலையினை உண்டு வந்தால் உங்களுக்கு நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உங்கள் இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க உதவும்.


இதில் மேலும் படிக்கவும் :