இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும் வழிமுறைகள் என்ன...?
நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களுக்கும் இரத்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இரத்தம் சுத்தமாக இருந்தால் தான் உடலின் செயல்பாடுகள் சரியாக நடக்கும். இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
உடல் செயல்பாட்டிற்கு அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். நம் உடலில் இயற்கையாகவே இரத்த சுத்திகரிப்பு நடைபெறுகிறது. ஆனால் இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே நம் இரத்தம் அசுத்தமாக மாறிவிடுகிறது.
பீட்ரூட் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஈ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளன.
பச்சை காய்கறிகளில் மிகவும் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும். முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.
அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு குணமாகும். காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் பிராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளன.
இரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடல் நலத்துடன் இருக்க தண்ணீர் மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெதுவெதுப்பான நீரை ஒரு தாமிர பாத்திரத்தில் வைத்து விட்டு. காலையில் எழுந்தவுடன் அந்த நீரை பருகுவதால் இரத்தம் சுத்தம் செய்ய படுகிறது. தாமிரம், கல்லீரலை குளிர்ச்சியடைய வைக்கிறது. தண்ணீர் கழிவுகளை வெளியேற்றுகிறது.
Edited by Sasikala