ஆவி பிடிப்பதால் பலவிதமான நோய்த்தொற்றுகளையும் நீக்க முடியுமா...?
பல விதமான நோய்த்தொற்றுகளையும் ஆயுர்வேத மருத்துவத்தின் மூலம் எளிதில் நமக்கு கிடைக்கக்கூடிய பொருள்களை வைத்தே தடுக்க முடியும்.
ஆவிபிடித்தல் சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. தீவிரமான சளி மற்றும் இருமல் உபாதைகளால் அவதிப்படுபவர்கள் 100 மிலி தண்ணீரில் நான்கு பல் தோல் உரித்த அல்லது உரிக்காத, பூண்டைச் சேர்த்து அதில் இரண்டு சொட்டு எலுமிச்சை சாற்றைக் கலந்து நன்கு கொதிக்கவைத்து ஆவிபிடிக்கவும். இதனால் சளி, இருமல், ஜலதோஷம் போன்றவை நீங்கி சுவாசப்பாதை சீராகும்.
பூண்டு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கொண்டு தயாராகும் நீரை ஆவிபிடிக்கும்போது நுரையீரலில் உள்ள நோய்த்தொற்றுகள் அழிக்கப்படும். இதை நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் என யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
ஒரு நாளைக்கு மூன்று வேளை எனச் சில நாள்கள் தொடர்ந்து ஆவிபிடிப்பது சிறந்தது. கொரோனா நோய்க்கிருமியால் அதிகம் பாதிக்கப்படும் உறுப்பாக நுரையீரல் கருதப்படும் நிலையில், ஆவிபிடிப்பது நல்ல பயனளிக்கும்.
நோய்க்கு மிகச் சிறந்த மருத்துவம் ஆவிபிடித்தல் மட்டுமே. நல்ல சூடான ஆவி வரும் தண்ணீரை போர்வையால் மூடி நாம் சுவாசிக்க அந்த ஆவி நம்முடைய நாசி வழியாக உள்ளே மெதுவாக சென்று நுரையீரலில் இருக்கக்கூடிய கிருமிகளை அழிக்கும்.
ஆவி பிடித்துக் கொண்டிருக்கும் போது வியர்வை அதிகளவில் வெளியேறும். ஆவி பிடித்து முடித்த பிறகு ஆவி பிடித்த போர்வையை, வேர்வையை துடைத்த துண்டை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது.
யாரையும் தொடக்கூடாது. ஆவிப் பிடித்தால் உடனே அந்த துணிகளை கொதிக்கும் சூடான நீரில் வைத்து துவைத்துப் போட வேண்டும். மஞ்சள், மிளகு, எலுமிச்சை, இஞ்சி, துளசி இதையெல்லாம் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கும் போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
ஆனால் ஆவி பிடிக்கும் போது அதிக நேரம் ஆவி பிடிக்க கூடாது. உங்களால் சூடு தாங்க முடிந்த அளவில் ஆவி பிடியுங்கள். ஒருவர் ஆவி பிடித்த துணியில், தண்ணீரில் இன்னொருவர் ஆவி பிடிக்கக்கூடாது. இதனால் கிருமித் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.