செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் உணவுகள் என்ன...?

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதன் மூலம் பருவகால காய்ச்சல் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். காய்ச்சலை நெருங்கவிடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். 

நோய் தொற்றுகளுக்கு எதிராக போராடுவதில் பூண்டுவுக்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அது அதிகரிக்க செய்யும். ரத்த அழுத்தம், தமனி களின் செயல்பாடுகளை சீராக பராமரிக்கும் தன்மையும் பூண்டுவுக்கு உண்டு. 
 
முட்டை கோஸ், கீரை போன்ற பச்சைக்காய்கறிகளில் வைட்டமின் சி, இ மட்டுமின்றி ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. பிராக்கோலி, பீன்ஸ், புடலங்காய், பட்டாணி போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பப் பெற்றவை. அவைகளை தவறாமல் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி போன்ற பழங்களில் வைட்டமின் சி நிறைந்திருக்கும். இவற்றில் ஆன்டி ஆக்சிடெண்ட் அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும். மிளகையும் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. 
 
டீ, காபியை தவிர்த்துவிட்டு இஞ்சி டீ பருகுவது நல்லது. இது உடலுக்கு புத்துணர்ச்சி வழங்குவதோடு காய்ச்சல், மார்பு சளி போன்ற பாதிப்புகளை கட்டுப்படுத்தும். இஞ்சியை சமையலிலும் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.  
 
தயிர், மோர், லசி போன்ற பால் பொருட்கள் எளிதில் ஜீரணமாக உதவி புரிபவை. அவை குடலுக்கு நலம் சேர்ப்பவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு  நோய் தொற்றுகள், வீக்கம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கும் தன்மை கொண்டவை. வளர் சிதை மாற்றத்தையும் ஒழுங்குபடுத்துபவை. 
 
சளி முதல் புற்றுநோய் வரை அனைத்துவிதமான வியாதிகளிலும் இருந்து உடல் நலனை பாதுகாப்பதில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இரும்பு சத்து குறைபாடு கொண்டவர்கள் சிவப்பு குடமிளகாயை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். அதிலும் நோய் எதிர்ப்பு நிறைந்துள்ளது.