திங்கள், 25 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (09:34 IST)

கடுக்காய் பொடியை தினமும் எடுத்துக்கொள்வதன் என்ன நன்மைகள் !!

Kadukkai
கடுக்காய் தூளை தினமும் ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், நோயில்லா நீண்ட ஆயுளை பெறலாம். கடுக்காய் ஓட்டை தூளாக்கி இரவு சாப்பிட்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் வாயில் போட்டு, ஒரு டம்ளர் நீரைக் குடித்து வந்தால் உடல் வலு பெறும்.

தோலில் படை, நமைச்சல் உள்ளவர்கள் கடுக்காயை சந்தனக் கல்லில் அரைத்து பாதிப்பு உள்ள இடங்களில் தடவி வந்தால் தோல் பிரச்சனைகள் நாளடைவில் மறைந்து விடும். உடலை பலப்படுத்தும்.
 
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகியவை சேர்ந்ததுதான் திரிபலா சூரணம். திரிபலா சூரணத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும்.
 
கடுக்காய் அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. ஆஸ்துமா, ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல், மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.
 
இது உடலில் கபம் சேருவதை தடுப்பதால் சுவாச பிரச்சனையை எளிதாக்குகிறது மற்றும் சளியிலிருந்து விடுபட செய்கிறது. கடுக்காய் பொடியை தினமும் உட்கொள்வதன் மூலம் நுரையீரல் திசுக்களை வலுப்படுத்தி நுரையீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
 
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை ஒன்றாக கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்வு சரியாகும்.
 
கடுக்காய்ப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால், பற்கள் உறுதியாகும். ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும். 25 கிராம் அளவுக்குக் கடுக்காய்ப் பொடியுடன், ஒரு டம்ளர் நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, அரை டம்ளர் நீராகச் சுண்டிய பின்னர் அதை குடித்து வந்தால், கண் நோய்கள் குணமாகும்.