வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்ன பயன்கள்...?

தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை ஆக்சிஜன் அதிகப்படியாக கிடைப்பதன் மூலம் நம்முடைய உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்.

தினம்தோறும் தண்ணீரை குடித்து உடலை சுத்தமாக வைத்திருந்தால் முகத்தில் எந்த ஒரு முகப்பருவும் ஏற்படுவதற்கு வாய்ப்பே இல்லை. அதிகப்படியான தண்ணீர்  குடிப்பதன் மூலம் நம்முடைய தோலும் மென்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தண்ணீர் என்பது தாகத்தை தணிப்பதற்கு மட்டும் குடிப்பது அல்ல. இந்த தண்ணீரை முறையாக குடித்துவந்தால் நம் உடலில் இருக்கும் பல பிரச்சினைகள் தீரும்.  தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் 10 வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
 
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நம்முடைய குடல் சுத்தம் செய்யப்படுகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை காலை கடனில் வெளியேற்றி விட்டோமேயானால் உடல் ஆரோக்கியம் பெறும்.
 
நம்முடைய உடம்பில் இருக்கும் எல்லா வகையான நச்சுப் பொருட்களை வெளியேற்றும் தன்மை இந்த தண்ணீருக்கு உண்டு. உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் நச்சுப் பொருட்கள் எல்லாம் சிறுநீரின் வழியாக முழுமையாக வெளியேறிவிடும். 
 
தண்ணீரை எவ்வளவு அதிகமாக பருகுகின்றோமோ, அவ்வளவு சிறுநீர் கழிவு வெளியேறும். அந்த சிறுநீரில் உங்கள் உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்கள் வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குடல்புண் என்று சொல்லப்படும் இந்த அல்சரை வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் மூலம் தடுக்கப்படுகிறது. காலையில் உணவு அருந்தாமல்  இருப்பவர்களுக்கு கூட, வெறும் தண்ணீர் மட்டுமாவது குடித்துக் கொள்ளுங்கள். அல்சர் வராமல் தடுக்க முடியும்.