1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா....?

விரதம் இருந்து கடவுளை வழிபடும்போது கடவுள் மனம் இறங்கி நமக்கு நல்வினையை செய்வார் என்பது நம்முடைய பலரின் நம்பிக்கை. அது உண்மைதான். இந்த விரத முறைகள் நம் முன்னோர்கள் காலத்திலிருந்தே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அறிவியல் பூர்வமாக கூற வேண்டுமென்றால் விரதம் இருப்பது மிக மிக நல்லது. விரதம் இருப்பதால் பல வகையான நோய்கள் குணமாகும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. ஆம், நம் உடலில் உள்ள அசுத்த ரத்ததை சுத்திகரிக்கிறது.
 
உண்மையில் சொல்லப்போனால் நம் உடல் இயக்கங்களையெல்லாம் நல்வழிப்படுத்துகிறது. அதாவது நம் உடல் நலக் குறைவால் அதிகமாக சாப்பிட முடியாமல்,  குறைவாக சாப்பிட்டாலும் அந்நேரங்களில் மட்டும் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்வோம்.
 
அச்சமயத்தில் நாம் எடுத்து கொள்கிற உணவு வகை தான் நம் உடலுக்கு மிகவும் நல்லது. மற்ற நாட்களில் நாம் எடுத்து கொள்கிற உணவு வகைகள் சரியானது கிடையாது. எனவே தான் விரதம் இருந்து அவற்றை சரி செய்கிறோம்.

நாம் விரதம் இருப்பதால் நம் உடல் நிலை சீராகிறது. மேலும், விரதம் இருப்பதால் மிக  சிறந்த ஒரு நன்மையும் உள்ளது.