1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

தினமும் திராட்சை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன...?

திராட்சை பழத்தில் சர்க்கரைசத்து, கார்போஹைட்ரேட், டெக்ஸ்டாஸிரஸ், ப்ரெக்டொஸ், பெக்டின், பார்டாரிக் அமிலம், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதசத்து,  சுண்ணாம்பு சத்து, தாமிரம் மற்றும் இரும்பு சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

தினமும் ஒரு குவளை திராட்சை சாறு குடித்து வந்தால், உடலின் வைட்டமின் சி சத்து அதிகப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. திராட்சையில்  சர்க்கரை சேர்க்காமல் குடித்து வந்தால், ஒற்றை தலைவலி பிரச்சனை சரியாகும்.
 
திராட்சை பழத்தில் உள்ள சத்துக்கள் காரணமாக மார்பக புற்றுநோய் செல்கள் அளிக்கப்படுகிறது. இதனால் பெண்கள் திராட்சை பழங்களை சாப்பிடலாம். மேலும்,  ரெஸ்வெற்றல் அமிலம் மூலமாக புற்றுநோய் செல்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, உடலில் ஏற்படும் கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுக்குள் வைக்கிறது.
 
திராட்சை பழம் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. நுரையீரலுக்கு நன்மை அளிக்கிறது. திராட்சை பழத்தில் இருக்கும் டாக்சின்கள் இரத்தம்  தொடர்பான பிரச்சனையை சரி செய்து, இரத்தத்தின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
 
உடற்பயிற்சி செய்துவிட்டு திராட்சை பழச்சாறு குடித்து வந்தால் உடல் எடையானது குறையும். திராட்சை பழச்சாறால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதய  தசைகளை மேன்மைப்படுத்தி, இரத்த ஓட்டத்தினை சீராக்கும். திராட்சையை அரைத்து முகம் கழுவி வந்தால், சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி, சருமம்  பொலிவாகும்.
 
திராட்சை பழத்தை இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், திராட்சை பழத்தின் சத்துக்களால் உடல் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சி  கிடைக்கும் என்பதால், இரவு வேளைகளில் திராட்சை பழச்சாரை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்சனை இருக்கும் நபர்கள் வெறும் வயிறில் திராட்சை பழச்சாறை சாப்பிட வேண்டாம். வாயு தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.