1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
  4. Make the skin glow; Simple Beauty Tips !!

சரும அழகை பளிச்சிட செய்யும் எளிய அழகு குறிப்புகள் !!

சரும அழகு
பால் பவுடரில் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் முகத்தில் உள்ள கருமை நிறம் மறைந்து  முகத்தின் நிறம் அதிகரிப்பதை உணர முடியும்.

ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.பின் புளித்த தயிர் சேர்த்து நன்கு கலந்து,  முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம்.
 
எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில்  தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.
 
துளசியில் உள்ள ஆன்டி - ஆக்ஸிடன்ட் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள், சரும செல்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சருமத்தை பொலிவோடும்  ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக துளசி முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். அதற்கு துளசியை அரைத்து பேஸ்ட் செய்து,  முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
குங்குமப்பூவை பாலுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊறவைத்து கழுவ, குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் மேம்பட்டு காணப்படும். அதிலும் இந்த செயலை தினமும் ஒருவர் பின்பற்றினால், சீக்கிரம் வெள்ளையாவதைக்  காணலாம்.
 
புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து கழுவ வேண்டும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சருமம் வறட்சியை தடுக்க உதவும் நல்லெண்ணெய் !!