நம்மை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவும் உணவுகள்....


Sasikala|
தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலோ அல்லது ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலோ சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

 
 
* உங்கள் உணவில் வாரத்தில் இருமுறை மீன் இருக்கட்டும். இரண்டில் ஒன்று எண்ணை வகை மீனாக இருந்தால் நல்லது. கொலஸ்ட்ராலை குறைத்து, இருதய நோய் அபாயத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய `ஒமேகா 3 பேட்டி ஆசிட், எண்ணை செறிந்த மீன்களில் அதிகம் உள்ளது.
 
* தினந்தோறும் 5 வகை பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கிய ஆரோக்கியவாழ்வுக்குவுக்கு அடித்தளமிடும். பழங்கள், காய்கறிகளில் உள்ள `ஆண்டிஆக்ஸிடன்ட்கள்’ கேன்சர், இருதய நோய்கள் போன்ற மோசமான நோய்களைத் தடுக்கும்; நோய்த்தொற்றுக்கு எதிராக இருக்கும்.
 
* கீரைகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
 
* மொத்தம் 7 வகையான நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வண்ண காய்கறி, பழங்களும் வெவ்வேறு வகையான `ஆண்டி ஆக்ஸிடன்ட்களை’ கொண்டிருக்கின்றன. எனவே எல்லா வண்ண காய்கறி, பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும்.
 
* சாதாரணமாக குளிர்பானங்களில் 10 சதவீத சர்க்கரை உள்ளது. அதாவது ஒரு புட்டியில் 150 கலோரி இருக்கிறது. தொடர்ந்து குளிர்பானம் பருகுவது தொப்பைக்கு ஒரு முக்கியக் காரணம். `டயட்’ குளிர்பானங்களுக்கு மாறலாம்; ஜுஸுடன் அதிக தண்ணீர் சேர்த்துப் பருகலாம்.
 
* பெர்ரிப் பழங்களில், அதுவும் ஸ்ட்ராபெரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளதால், இவற்றை கிடைக்கும் போது உட்கொண்டு வந்தால், சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ளலாம். இந்த சிட்ரஸ் பழம் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தை வழங்கி, முதுமையைத் தள்ளிப் போடும்.
 
* ப்ராக்கோலியை முடிந்தால் பச்சையாக அல்லது ஜூஸ் போட்டு அதிகாலையில் குடியுங்கள். இதனால் இது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும். தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. தர்பூசணிப் பழத்தை முடிந்தால், தினமும் ஒரு கப் வாங்கி சாப்பிடுங்கள்.
 
* முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், முதுமையைத் தள்ளிப் போடலாம். தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். 
 
* அனைவருக்கும் தினசரி 18 கிராம் நார்சத்து தேவை. அதற்கு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் ஆகியவை நல்ல ஆதாரங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :