திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்தி அசிடிட்டி பிரச்சனையை நீக்கும் வழிகள் !!

அசிடிட்டி பிரச்சினையை போக்க பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடலாம். இது செரிமானத்துக்கு உதவுவதோடு அசிடிட்டி பிரச்சனையும் போக்கிவிடும்.

அசிடிட்டி பிரச்சனை ஏற்படும்போது 5 துளசி இலைகளை வாயில் போட்டு சாப்பிடுவதால் நீங்கும். குளிர்ந்த பாலில் சர்க்கரை எதுவும் சேர்க்காமல் கொஞ்சம் நெய்  சேர்த்து கொள்வது கூடுதல் நன்மை அளிக்கும்.
 
நாள்பட்ட அசிடிட்டி பிரச்சினை இருந்தால் சோம்புவை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து விடுங்கள். அந்த தண்ணீரை எடுத்து குடித்து வர அசிடிட்டி பிரச்சினை நீங்கிவிடும்.
 
சீரகத்தை வாயில் போட்டு மெல்லலாம். அமிலத்தன்மையை குறைக்க தண்ணீரில் கொதிக்கவைத்து குளிர்ந்ததும் அந்த தண்ணீரை குடிக்கலாம்.
 
ஏலக்காயின் இரண்டு காய்களை நசுக்கி அதன் தூளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குளிர்ந்த சாற்றை உடனடி நிவாரணத்திற்காக பயன்படுத்துவதால்  அசிடிட்டி பிரச்சினையை விரட்டி விடலாம்.
 
புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரில் போட்டு சூடுப்படுத்தி பிறகு குளிர்ந்த பிறகு அந்த தண்ணீரை குடித்து வந்தால், அஜீரணத்தை சரிசெய்யும்.
 
1 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை ஒரு நாளைக்கு 2 முறை சாப்பிட்டு வரலாம். இதில் அதிகளவு வைட்டமின் சி இருப்பது அமிலத்தன்மையால் காயமடைந்த வயிறு மற்றும் உணவுக்குழாயை குணப்படுத்த பயன்படுகிறது.