புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

ப்ரோக்கோலியில் உள்ள வைட்டமின்களும் அதன் பயன்களும் !!

ப்ரோக்கோலி பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் நிறைந்துள்ள சத்துக்களுக்காகவே இது ஒரு அருமையான உணவு என்று கூறலாம். 

ப்ரோக்கோலி சேதமடைந்த சருமத்தை விரைவில் குணப்படுத்த உதவுகின்றது. இது இறந்த அணுக்களை வெளியேற்றி, புதிய அணுக்களை சருமத்தில் உற்பத்தி  செய்ய உதவுகின்றது. 
 
ப்ரோக்கோலியில் வைட்டமின் C மற்றும் E நிறைந்துள்ளதால் அதிக ஆக்ஸிஜனேற்றத்தைக் கொடுக்கின்றது.. ப்ரோக்கோலி 9௦% நீர் சத்து உள்ளது. இதில்  வைட்டமின் C, வைட்டமின் K1, வைட்டமின் B9, பொட்டசியம், மாங்கனீஸ் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. 
 
ஜின்க் அதிக அளவு இருப்பதால், முகத்தில் பருக்கள் தோன்றினால் அதனை உடனடியாக குணப்படுத்த ப்ரோக்கோலி உதவுகின்றது. ப்ரோக்கோலியை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, நாளடைவில் உங்கள் முகத்தில் மற்றும் சருமத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.
 
ப்ரோக்கோலி சருமத்திற்கு மட்டுமல்லாது, தலை முடிக்கும் தேவையான போஷாக்கைத் தருகின்றது. இதனால், உங்கள் தலை முடி நல்ல அடர்த்தியாகவும், கருமையான நிறத்திலும் உங்கள் முகத்திற்கு மேலும் அழகை கூட்டுகின்றது. 
 
தைராய்டு பிரச்சனையை குறைக்கும். ப்ரோக்கோலியில் இருக்கும் சத்துக்கள், தைராய்டு சுரபி சீராக செயல் பட உதவுகின்றது. இதனால் எந்த வகை தைராய்டாக இருந்தாலும் அதனை குணப்படுத்த இது பெரிதும் உதவுகின்றது.
 
நல்ல ஜீரணத்தை உண்டாக்கும். ப்ரோக்கோலியை தினமும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால், அஜீரண பிரச்சனைகள் குறையும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் எளிதாக உணவை ஜீரணமடைய உதவும்.