இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா வசம்பு !!
வசம்பு ஜலதோஷம் தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கின்றது. கால் தேக்கரண்டி அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டை கட்டு போன்றவை விரைவில் குணமாகும்.
பூரான், தேன், விஷ போன்றவை கடிப்பதால் விஷம் நமது உடலில் பரவி விடுகிறது. வசம்பை நன்கு பொடி செய்து கடிபட்ட இடம் வைத்தால் போதும்.மேழும் கொதிக்க வைத்த நீரில் வசம்பை போட்டு காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சி கடியினால் பரவிய விஷம் முறிந்து விடும்.
வசம்பு இயற்கையிலேயே அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை. சிறு குழந்தைகள் உறங்கும் அறைகளில் வாசனை பொடியாக ஆங்காங்கே தூவி வைப்பதால் தொற்றுநோய்கள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் பற்றும் அபாயத்தினை வெகுவாக குறைக்கிறது.
வாகனங்களில் பயணம் செய்யும் போதும் சிலருக்கு வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுகின்றது. இப்பிரச்சனை ஏற்படும்போது வசம்பை நன்கு பொடி செய்து வாயில் போட்டு சிறிது இதமான வெந்நீரை அருந்தினால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
வாதம் உடலில் அதிகரிக்கும்பொழுது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்துக் கொண்டு வலியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது. வாதத்தின் குறிப்பாக கீழ்வாதம் எனப்படும் வாதநோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. வசம்புடன் சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீழ்வாதம் போன்ற அனைத்து பிரச்சனைகளும் குணம் ஆகும்.
திக்கு வாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும். இதனால் சிறிய பாதிப்புகள் உண்டாகும். இந்த திக்கு வாய் பிரச்சனையை தீர்க்க முறையான மருத்துவம் மற்றும் பேச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் காலத்தில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டுக் குழைத்து கொடுத்து வந்தால் திக்கு வாய் குணமாகும்.