திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும் ஆமணக்கு எண்ணெய்....!

விளக்கெண்ணெய் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. விளக்கெண்ணெய், ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய் ஆகும். மற்ற  எண்ணெய்களை விட அடர்த்தி அதிகமாகக் காணப்படுவதால், சற்று பிசுபிசுப்புத்தன்மையுடன் காணப்படும். விளக்கெண்ணெய் குளிர்ச்சியூட்டக்கூடியது.
கிராமப்புறங்களில் இன்றைக்கும் விளக்கெண்ணெயைத்தான் பேதி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். காலையில் சூடான டீ அல்லது காபியில் விளக்கெண்ணெய்  கலந்து குடித்தாலே மலம் இளகி தாராளமாக வெளியேறிவிடும்.
 
இயற்கையான முறையில் கண் மை தயாரிக்கவும் விளக்கெண்ணெய் பயன்படுகிறது. இப்படிக் காய்ச்சி எடுக்கப்படும் ஆமணக்கு எண்ணெய்தான் விளக்கெண்ணெய் எனப்படுகிறது.
 
நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது. குறைந்தது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால்  அமைந்துள்ளது. இப்போதும் கிராமத்தில் குழந்தைகள் அழுதால் தொப்புளில் சில துளி விளக்கெண்ணெய் விட்டாலே அடுத்த நொடியை குழந்தை அழுகையை  நிறுத்திவிடும். காரணம் சூடு மற்றும் வாயுக் கோளாறுகளால் ஏற்படும் பிரச்னைகளைச் சரிசெய்யக்கூடியது இந்த விளக்கெண்ணெய் வைத்தியம். தொப்புளில்  தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும்.
 
கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு போன்றவற்றை குணப்படுத்துகிறது விளக்கெண்ணெயைப் பயன்படுத்துவதால் மலச்சிக்கல் தீரும், வயிறு சம்பந்தமான  கோளாறுகள் நீங்கும், வாய்வுத்தொல்லை நீங்கும், வயிற்றுப் புண் நீங்கும், வயிற்றில் உள்ள கசடுகள் நீங்கும், வயிற்றுப் பூச்சிகள் வெளியேறும், உடலுக்கு  குளிர்ச்சி தரும். 
 
விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சம் சாறு சம அளவு எடுத்து காய்ச்சிக் கொண்டு 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு  ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.
 
மாதவிடாய் சரியாக வெளிப்படாமல் வயிற்றுவலியை ஏற்படுத்தும். அப்போது அடிவயிற்றில் விளக்கெண்ணெயைத் தடவி அதன்மீது ஆமணக்கு இலைகளை வதக்கி பொறுக்கும் சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரத்தப்போக்கு ஏற்பட்டு வயிற்று வலி குறையும். 
 
பருவமடைந்த பெண்களுக்கு வெறும் வயிற்றில் விளக்கெண்ணெய் கொடுக்கும் வழக்கம் இருந்தது. இது கர்ப்பப்பை தொடர்பான கேளாறுகளை சரி செய்யும்.  ஆனால் அந்த வழக்கம் நாளடைவில் குறைந்து வருவதே பல கர்ப்பப்பை பிரச்சினைகளுக்குக் காரணமாக உள்ளது.