1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (15:05 IST)

முட்டை கோஸை வெறுப்பவரா? இது உங்களுக்குத்தான்....

முட்டை கோஸ் வேண்டாம் என வெறுப்பவரா நீங்கள், அதில் உள்ள நன்மைகளை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
1. முட்டைகோஸை சமைத்து சாப்பிடுவதைவிட பச்சையாக சாப்பிடுவதே மிகவும் சிறப்பானது.
2. முட்டைகோஸ் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படுவது குறையும். 
3. முட்டைகோஸில் உள்ள சல்பர், மற்றும் அயோடின் ஆகியவை வயிறு, குடல் மற்றும் குடற்சவ்வு போன்ற உறுப்புகளை சுத்தப்படுதுகின்றன. 
4. முட்டைகோஸில் டார்டரானிக் என்ற ஒரு வகை அமிலம் உள்ளது அது தேவைக்கதிகமாக உள்ள மாவுப்பொருள்களை கொழுப்பாக மாறாமல் இருக்க செய்கிறது. 
5. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு முட்டைகோஸ் ஒரு பயனுள்ள உணவாக இருக்கும்.
6. வயிற்று புண் உள்ளவர்கள் முட்டைகோஸ் சாற்றை நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும்.
7. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். 
8. முட்டைகோஸில்  உள்ள வைட்டமின் ஏ சத்து கண்  பார்வைக்கு சிறந்தது. கண் நரம்புகளை சீராக இயங்கச் செய்யும்.
9. முட்டைகோஸ் நரம்புகளுக்கு வலு கொடுக்கும், நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
10. முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.