புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

பயன் தரும் மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்...!

மூலிகைகள் நோய்களை குணமாக்க தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. பல்வேறு நோய்களுக்கு நூற்றுக்கணக்கான பாரம்பரிய வைத்தியக் குறிப்புகள் உள்ளன.

கீழாநெல்லி பொடி : மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
 
முடக்கத்தான் பொடி : மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
 
கோரைகிழங்கு பொடி : தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
 
குப்பைமேனி பொடி : சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
 
பொன்னாங்கண்ணி பொடி : உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
 
முருங்கைவிதை பொடி : ஆண்மை சக்தி கூடும்.
 
லவங்கபட்டை பொடி : கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
 
வாதநாராயணன் பொடி : பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
 
பாகற்காய் பவுடர் : குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
 
வாழைத்தண்டு பொடி : சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
 
மணத்தக்காளி பொடி : குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
 
சித்தரத்தை பொடி : சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
 
பொடுதலை பொடி : பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
 
சுக்கு பொடி : ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
 
ஆடாதொடை பொடி : சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
 
கருஞ்சீரகப்பொடி : சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
 
வெட்டி வேர் பொடி : நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.