பல நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ள உதவும் துளசி...!!

Sasikala|
“மூலிகைகளின் அரசி” எனப்படும் “துளசி”க்குதான் பிருந்தை என்ற மற்றொரு பெயரும் உண்டு. துளசியை பற்றி பொதுவாக நாம் அறிந்தது துளசி சளிக்கு நல்லது  என்பது மட்டுமே. ஆனால் துளசி தமிழ் மருத்துவத்தில் எண்ணற்ற நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது. துளசியில் வியக்கத்தக்க மருத்துவ குணங்கள்  உள்ளன.

துளசி செடியை வீட்டிற்குள் வளர்க்கும் வழக்கம் நம்மவர்கள் மத்தியில் மட்டுமே இருந்ததற்கு காரணம் நம் முன்னோர்கள் துளசியின் அருமை தெரிந்தவர்கள். துளசி  மற்ற தாவரங்களை விட அதிகளவில் கார்பன்டை ஆக்ஸைடு வாயுவை கிரகித்து ஆக்சிஜனை வெளியிடும் சக்தி கொண்டது. மேலும் காற்றிலுள்ள புகையை  சுத்திகரிக்கும் தன்மையும் கொண்டது.
 
துளசி இருக்கும் இடத்தில் எந்த விஷ ஜந்துக்களும், கொசுக்களும், தீய சக்திகளும் அண்டாது. தினமும் துளசி இலைகளை மென்று தின்று வந்தால் சிறுகுடல்,  பெருங்குடல், வயிறு தொடர்பான நோய்கள் மற்றும் வாய்நாற்றம் போன்ற அனைத்தும் நம் பக்கமே வராமல் போகும்.
 
இந்த காலத்தில் நமக்கு வரும் புது புது பெயர்கள் கொண்ட அனைத்து காய்ச்சல்களுமே துளசிக்கு கட்டுப்படும். சிறு வயது முதலே துளசி இலைகளை தின்று  வந்தால் சர்க்கரை நோய் என்றால் என்ன? என்று கேட்கலாம். துளசி இலையை சாறு எடுத்து, அதனுடன் எலுமிச்சை சாறை சேர்த்து மிதமாக சூடு படுத்தி பிறகு  அதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்ட பின் அரைமணி நேரம் கழித்து சாப்பிட்டு வர உடல் எடை குறைய தொடங்கும்.
 
முற்றிய முருங்கை இலை மற்றும் துளசி இலையை சேர்த்து சாறு பிழிந்து அதில் 50 மில்லி அளவு எடுத்து அதனுடன் சிறிது சீரக பொடியை சேர்த்து காலை மாலை என இரண்டு வேளைகளும் சாப்பிட்டு, கூடவே உப்பு, புளி, காரம் குறைந்த உணவுகளை தொடர்ந்து 48 நாட்கள் எடுத்து வந்தால் இரத்த அழுத்த நோய்  கட்டுக்குள் இருக்கும்.
 
துளசி இலையை எலுமிச்சை சாறு சேர்த்து பசை போல் அரைத்து தோல் நோய்களுக்கு பற்று போடலாம். மேலும் இந்த கலவையுடன் வேப்பிலையை சேர்த்து அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் தேமல் மறையும்.
 
வீட்டில் உள்ள செம்பு பாத்திரத்தில் தேவையான அளவு தூய நீர் விட்டு அதில் துளசி இலைகளை போட்டு 8 மணிநேரம் மூடி ஊற வைத்து காலை வெறும்  வயிற்றில் 48 நாட்கள் குடித்து வந்தால் என்றும் இளமையுடனும், தோல் சுருக்கம் இன்றியும், கண்பார்வை குறைவு இன்றியும் வாழலாம். துளசி இலைகளை கழுவி  மென்று தின்றும், நீரில் ஊற வைத்து அந்த நீரை குடிப்பதின் மூலமுமே பல நோய்களிலிருந்து நம்மை காத்துகொள்ள முடியும்.


இதில் மேலும் படிக்கவும் :