வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 30 ஜூன் 2022 (13:36 IST)

எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் தக்காளி !!

skin care - tomato
நாட்டு தக்காளி புளிப்பு சுவையும், விதைகளும் நிரம்பியது. இதை சமைக்கும்போது விதைகளை வடிகட்டிய பிறகே சமைக்க வேண்டும். இல்லாவிடில் அவை சிறுநீரகத்தில், குறிப்பாக ஆண்களுக்கு சிறுநீரக கற்களை உருவாக்கிவிடும்.


தக்களியானது கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. மாலைக்கண் நோயை நீக்குகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். எலும்பை பலமாக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

தோலை பளபளப்பாக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். மலச்சிக்கலை நீக்கும். குடற்புண்களை ஆற்றும். களைப்பைப் போக்கும்.

ஜீரண சக்தியைத் அதிகரிக்கும். சொறி, சிரங்கு, போன்ற தோல் நோய்களைப் நீக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். உடல் பருமனை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தக்காளி.

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து அதிகளவு உள்ளது.

கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து இதில் அதிகளவில் நிரம்பியுள்ளது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இதுவும் தக்காளியில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் கே இரத்தக் கசிவுகளை கட்டுப்படுத்த உதவுகிறது.