1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Tomatoes help to control weight gain !!

உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவும் தக்காளி !!

உடல் எடை
இரத்தத்தை சுத்தமாக்கும். எலும்பை பலமாக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தோலை பளபளப்பாக்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். மலச்சிக்கலை நீக்கும். குடற்புண்களை ஆற்றும். களைப்பைப் போக்கும்.


ஜீரண சக்தியைத் அதிகரிக்கும். சொறி, சிரங்கு, போன்ற தோல் நோய்களைப் நீக்கும். தொற்று நோய்களைத் தவிர்க்கும். வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றும். கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடல் பருமனை குறைக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு தக்காளி.

தக்காளிப் பழத்தில் இல்லாத சத்துக்களே இல்லை. இதில் வைட்டமின் ஏ, பி, சி, கே, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து அதிகளவு உள்ளது. கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ சத்து இதில் அதிகளவில் நிரம்பியுள்ளது. அதேபோல் வைட்டமின் கே சத்தும் அரிதான ஒன்று. இதுவும் தக்காளியில் நிறைந்துள்ளது.

தக்காளி ஜூசை வெறும் வயிற்றில் காலையில் பருகி வந்தால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தக்காளி சூப் செய்து பருகினால் சோர்வும், களைப்பும் நீங்கி விடும்.

பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

தக்காளியில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், நமது உடலின் இன்சுலின் அளவையும், கொழுப்பின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் விட்டமின் C யானது மார்பக புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
முருங்கை கீரையின் மருத்துவ நன்மைகள் குறித்து தெரிந்துக்கொள்வோம் !!