கீழாநெல்லி கீரை பொதுவாக நீர் நிறைந்த இடங்களில் தானாகவே வளரக்கூடியது. கீழாநெல்லியானது கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இது குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. நீர்நிலைகள், வயல் வரப்புகளில் வளரக்கூடியது. இதனுடைய இலைகள், புளியமரத்தின் இலைகளைப் போலவே சிறியதாகக் காணப்படும். இதன் இலைகளுக்குக் கீழே, பூக்களும் காய்களும் வளரும். இலைகளுக்குக் கீழே நெல்லிக்காய் போன்று இதன் காய்கள் இருப்பதால் இதை ‘கீழாநெல்லி’ என்று அழைக்கிறார்கள். இதேபோன்று இலைகளுக்கு மேலே...