செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கல்லீரலை சுத்தம் செய்ய இயற்கை பானம் தயாரிக்கும் முறை.......

உடலில் கல்லீரல் மிகவும் பெரிய மற்றும் முக்கியமான உறுப்பு. இந்த கல்லீரலில் டாக்ஸின்கள் அதிகமாக சேர்ந்தால்,  கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதனால் பல்வேறு தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமானாலும் கல்லீரலின் செயல்பாடு அவசியம்.

 
தேவையான பொருட்கள்: 
 
செலரி  - 5 
தண்ணீர் - 6 கப் 
எலுமிச்சை - 3 
நறுக்கிய கொத்தமல்லி - 1 கப்
 
தயாரிக்கும் முறை: 
 
முதலில் மிக்ஸியில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி, செலரி ஆகியவற்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கல்லீரலை சுத்தம் செய்யும் பானம் தயாரிவிட்டது.
 
இந்த ஆரோக்கிய பானத்தை தினமும் மூன்று வேளை உணவு உட்கொள்ளும் முன் ஒரு சிறிய டம்ளர் பருக வேண்டும். இப்படி மூன்று நாட்கள் இந்த சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். பின் வேண்டுமானால், மீண்டும் இந்த சிகிச்சையை மூன்று நாட்கள் கழித்து பின்பற்றலாம்.
 
குறிப்பு:
 
இந்த சிகிச்சை முறையை பின்பற்றும் போது, வயிறு நிறைய உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் இது சுத்தம் செய்யும் சிகிச்சை என்பதால், குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டியது அவசியம்.