கோடை காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க டிப்ஸ் !!
கோடை காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் சருமத்தில் நோய் தொற்றுகளால் பிரச்சினை உண்டாகும். அதனை தவிர்க்க ஆலிவ் எண்ணெய், லாவண்டர், ரோஸ்மேரி, சந்தனம், தேங்காய் எண்ணெய் போன்றவை சருமத்தை பாதுகாக்கிறது.
கோடை காலம் வந்தாலே உடலில் அதிகமாக வியர்வை வெளியேறும். இந்த வியர்வைகள் உடலில் படியும்போது நோய் கிருமிகள் அதிக அளவில் உருவாகிவிடும். இதற்கு ரோஸ்மேரி எண்ணெய்யுடன் தண்ணீரையோ அல்லது தேங்காய் எண்ணெய்யையோ சிறிது கலந்து வியர்வை வெளியேறும் பகுதியில் தடவி வரலாம். இப்படி செய்யும்போது இந்த எண்ணெய்யில் இருக்கும் வாசத்தில் நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும். மனதுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.
லாவண்டர் எண்ணெய் விபத்தில் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், தோல் அரிப்பு போன்ற பிரச்சினைகளை போக்கும் தன்மை கொண்டது. இந்த எண்ணெய்யை அடிக்கடி நுகர்ந்தால் மன அழுத்தம் கட்டுப்படும்.
கோடைகாலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தை தணிக்க சந்தனம் மிகவும் நல்லது. முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களுக்கு சந்தன எண்ணெய் நிவாரணம் தரும். சந்தன எண்ணெய் வெப்ப தாக்கத்தில் இருந்து சருமத்தை காக்கும்.
கழுத்து பகுதியில் புதினா எண்ணெய்யை தடவினால் நல்ல குளிர்ச்சியை உணரலாம். அதாவது புதினா எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதுமட்டுமல்லாமல் வீக்கம் மற்றும் குமட்டலையும் போக்கும் குணம் கொண்டது.
கோடை காலத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் பொருளில் ஒன்று எலுமிச்சை. இந்த எலுமிச்சை சாறை உங்கள் சருமத்திற்கு கூட பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு கூடுதல் பொலிவு சேர்க்கும். முகப்பரு, சரும வறட்சி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும்.