தலைமுடி உதிர்வதை தடுக்க உதவும் அற்புத மருத்துவ குறிப்புகள் !!
முடி அதிகம் கொட்டினால் உணவில் முருங்கை கீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து குறைபாடுகள் மட்டுமே பெரும்பாலும் இதற்க்கான காரணமாக அமைகிறது.
தலை முடி உதிர்வதை தடுக்க, நான்கு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாரையும் அதே அளவு தேங்காய் பாலையும் சேர்த்து தலையில் தேய்த்து ஒரு-மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.வாரம் ஒரு முறை இதுபோல செய்தால் முடி-உதிர்வதை கட்டுபடுத்தலாம்.
முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதையையும், மிளகையும் சேர்த்து அரைத்து தேய்த்து வர முடிவளரும்.
கீழாநெல்லியின் வேரை நன்றாக சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி தேங்கா எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்குதடவி வந்தால் வழுக்கை மறையும், முடி வளரும்.
அதிமதுரப் பொடி 50 கிராம், வசம்பு பொடி 50 கிராம், சீயக்காய் தூள் 100 கிராம், பூந்திக் கொட்டை பொடி 50 கிராம் இவற்றை பசும் பாலில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு, இளநரை நீங்கி தலைமுடி பட்டுப் போல் மின்னும். சருமம் வனப்படையும். தலைமுடி உதிராது.