புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

கால்சியம் சத்து அதிகளவு நிறைந்து காணப்படும் தூதுவளை !!

தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.

தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு  பிரச்சனைகளிலிருந்து எளிதாகக் குணம் அடைய முடியும்.
 
தூதுவளை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல தீர்வாகும். தூதுவளை சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தீரும். கண் வலி சரியாகி விடும். மேலும் கண் பார்வை  குறைபாடுகள் நீங்கி வலிமை அடையும்.
 
தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். அதைப்போல குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
 
தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த  சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.
 
தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்த பிரச்சனை நீங்கும். ஆக இவர்களின் ஆண்மைக் குறைபாடு தீரும்.
 
தூதுவளை செரிமான சம்பந்தமான கோளாறுகளை தீர்த்துவிடும். இது தூதுவளையின் மற்றொரு சிறப்பு. மேலும் ஜீரண சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு அவ்வப்போது துவையல் செய்து தரலாம்.