வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (15:47 IST)

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு அற்புத நிவாரணம் தரும் துத்திக்கீரை !!

துத்திக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.


மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக் கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும். மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.