வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (12:42 IST)

பல்வேறு நோய்களுக்கு அற்புத நிவாரணம் தரும் கருஞ்சீரகம் !!

கருஞ்சீரகம் பொதுவாக ஆஸ்துமா , நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் , எடை இழப்பு மற்றும் பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கிறது.


கருஞ்சீரக எண்ணெய்யுடன் சாத்துக்குடி சாரை சேர்த்து பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் மறைந்து விடும்.

தினமும் காலையில் பிளாக் டீயுடன் அரை ஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் சேர்த்து குடித்தால் நீரிழிவு நோய் குறைவதை பார்க்க முடியும்.

ஒரு கைப்பிடி கருஞ்சீரக விதைகளை எடுத்து , கடுகு எண்ணெய்யுடன் சேர்த்து நன்கு சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், அதை இறக்கி கை பொறுக்கும் அளவில் ஆறியதும், மூட்டு வழி உள்ள இடத்தில் தடவினால் நல்ல முன்னேற்றம் தெரியும்.

உயர் இரத்த அழுத்தம் உடையவர்கள், அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய்யை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து குடிக்கலாம்.

சிறுநீரக கற்கள் பிரச்சனை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. இதை தடுக்க இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரக வலி, கற்கள் மற்றும் தொற்றுநோயிலிருந்து விடுபடலாம் என்று கூறப்படுகிறது.

ஈறுகளில் வீக்கம் அல்லது இரத்தப்போக்கு மற்றும் பலவீனமான பற்கள் போன்ற பல் பிரச்சனைகளில் இருந்து கருஞ்சீரகம் பாதுகாக்கிறது.