ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உயர் இரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க செய்யவேண்டியவை....!

உயர் இரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. இது தான் ஆபத்தான இதய நோய்க்கு வழிவகுக்கிறது. தாற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் ஏராளமானோர் கஷ்டப்படுகின்றனர்.
1 டீஸ்பூன் இஞ்சி சாறு, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் சீரகப் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவேண்டும். பின் இந்த கலவையை தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வர, உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
 
உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் தினமும் சாத்துக்குடி, ஆரஞ்சு, பீச், ப்ளம்ஸ் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. முக்கியமாக தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும்  மேம்படும்.
 
முக்கியமாக உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் உப்பு சேர்த்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறைந்தது 2 லிட்டர் நீரைத் தவறாமல் குடிக்க வேண்டியது அவசியம்.
 
உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வெள்ளை சாதத்தை தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுவது நல்லது. இந்த அரிசியில் சோடியம் மற்றும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவு. 
 
கொத்தமல்லி ஜூஸை தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும். இப்படி குறைந்தது 10-12 நாட்கள் ஒருவர் தொடர்ந்து குடித்து வந்தால், உயர் இரத்த அழுத்தம் நன்கு குறைந்து இருப்பதைக் காணலாம்.