புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எளிதில் கிடைக்கும் செம்பருத்தி பூவில் இத்தனை மருத்துவ நன்மைகள் உள்ளதா...?

பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வருவதற்கு 4 செம்பருத்தி பூக்களை அரைத்து பசையாக செய்து கொள்ளவேண்டும். இதை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் 7 நாட்களுக்கு சாப்பிட்டு வரலாம்.
செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூளாக்கி ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும் மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால்  மாதவிடாய் சரியாக வரும்.
 
செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை முடி கருத்து அடர்த்தியாக வளரும்.
 
செம்பருத்தி பூ இதழ்கள் 15 எடுத்து கொள்ளவேண்டும். அதனுடன் ஆடாதோடை இலை மூலிகை தளிர் இலை ஒன்றை சேர்த்து நசுக்கி, 2 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி அதில் 1/2 தேக்கரண்டி தேன் கலந்து காலை மாலையில் 3 நாட்கள் குடித்து வந்தால்  இருமல் நீங்கும்.
 
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்து குளித்தால் தலை பேன்கள் குறையும். செம்பருத்தி பூவை பசுமையாகவே  அல்லது உலர வைத்து பொடி செய்து பாலில் கலந்து காலை, மாலையில் குடித்து வந்தால் இதயம் பலம் பெறும்.
 
4  செம்பருத்தி இலைகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி கொள்ள வேண்டும் ,இதனுடன் கற்கண்டு சேர்த்து கலக்கி குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
 
4  செம்பருத்தி மொட்டுகளை 2 தம்பளர் தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி கற்கண்டுடன் சேர்த்து குடித்து வந்தாலும் சிறுநீர் எரிச்சல்  குணமாகும்.
 
பலருக்கும் உடல் சூடு காரணமாக வாய்புண், வயிற்றுப்புண் உண்டாகும். அவர்கள் தினம் 10 செம்பருத்தி பூவின் இதழ்களை மென்று சாப்பிட்டால் அனைத்து புண்களும் விரைவில் ஆறும்.