செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (17:27 IST)

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா வெங்காயம்...?

Onions
வெங்காயத்தில் செலினியம் சத்து உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து ஆகும். மேலும், செலினியம் குறைபாடுள்ள நோயெதிர்ப்பு செல்கள் உள் செயல் முறைகளால் சேதப் படுகின்றன.


வெங்காயச் சாறு ஆஸ்துமா மற்றும் பிற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பயனளிப்பதாக சொல்லப் படுகிறது. வெங்காயச் சாற்றில் உள்ள குர்செடின்  என்னும் சேர்மம் வீக்கம் மற்றும் பிற ஒவ்வாமைகளையும் எதிர்த்துப் போராடுகிறது.

வெங்காயச்  சாற்றின் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை கண் நோய்த் தொற்றுகளுக்கு எதிராக செயல் படுகின்றன.

வெங்காயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் கந்தக கலவைகள் இரத்தம் உறைதலை குறைக்கின்றன. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.மேலும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பத்தன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

வெங்காயத்தில் உள்ள சல்பர் கலவைகளான குர்செடின் மற்றும் குரோமியம் ஆகியவை நீரிழிவு எதிர் பண்புகளை கொண்டுள்ளன.

வெங்காயம் சாப்பிடுவதால் மூளையில் இரத்த ஓட்டதை ஊக்குவிக்கிறது மற்றும் மூளையில் நீர் தேங்குவதைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெங்காய சாறு உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, முடி வேர் கால்களுக்கு ஊட்டம் அளித்து முடி வளர்ச்சியை தூண்டுக்கிறது. வெங்காயம் சாறில் உள்ள கந்தகம் பொடுகு, முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற முடி சம்பந்தமான அனைத்து கோளாறுகளையும் நீக்கி வலுவான மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.

வெங்காயத்தில் உள்ள நார்ச்சத்து குடலில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.