திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (15:53 IST)

விரல்களில் முத்திரைகளை செய்வதால் இத்தனை நன்மைகளா !!

mudras
உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது. ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு. கை விரல்களினால் செய்யப்படும் முத்திரைகள் குறித்து பல்வேறு புராதனமான நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.


பிரபஞ்சத்தில் இருக்கும் ஐந்து மூலகங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவையே மனித உடலிலும் உள்ளன.

மனித உடல், மனம் ஆகியவற்றை இயக்கவும் செய்கின்றன. உடல், மன நலத்திற்கு இந்த அய்ந்து மூலகங்களும் சீரான அளவில் இருத்தல் இன்றியமையாததாகும்.

மனித உடலின் ஒவ்வொரு விரலோடும் ஒவ்வொரு மூலகம் தொடர்புடையது. பெருவிரல் - நெருப்பு, சுட்டு விரல் - காற்று, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், நீர் - சிறு விரல். குறிப்பிட்ட விரல்களை குறிப்பிட்ட முறைகளில் சேர்க்கும் பொழுது அவ்விரல்களோடு தொடர்புடைய மூலகத்தின் இயக்கம் சீராகிறது.

ஒவ்வொரு முத்திரைக்கும் குறிப்பிட்ட சில பலன்கள் உண்டு. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கிறது. உடலின் மூன்று தோஷங்களான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமன்படுத்துகிறது.

நுரையீரல் நலனைப் பாதுகாக்கிறது. இருதயத்தின் செயல்பாடுகளைச் சீராக்குகிறது. மூளையில் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

நரம்பு மண்டலத்தைப் பலப்படுத்துகிறது. பிராண ஆற்றலை வளர்க்கிறது. சருமத்தைப் பாதுகாக்கிறது. சீரண இயக்கத்தை சரி செய்கிறது. தூக்கமின்மையைப் போக்குகிறது. அமைதியின்மையைப் போக்குகிறது.