1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 14 மே 2022 (13:36 IST)

சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகள் !!

Bottle gourd
கோடை கால வெப்பத்தால் உடல் சூடு அதிகரித்து, தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.


சுரைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடல் சூடு குறையும், வெப்பத்தால் ஏற்படும நோய்கள் தாக்காமல் காக்கும். மேலும் நமது தோலுக்கு மினுமினுப்பையும் கொடுக்கும்.

சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. ஏனெனில் சுரைக்காய் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து அருந்தினால் சிறுநீரம் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறந்த முன்னேற்றம் கிடைக்கும்.

சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்நோய்கள் நீங்கும். வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக உள்ளது.

பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் சுரைக்காய் பித்தத்தைக் குறைக்க ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாகும்.

சுரைக்காயில் நார்ச்சத்து வளமான அளவில் இருப்பதால் மலச்சிக்கல், குடலில் புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காயை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண்கள் ஆறும்.