கொள்ளில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் அற்புத பலன்களும் !!
கொள்ளில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புசத்து, மாவுசத்து, நார்ச்சத்து, பாஸ்போரோஸ், பொட்டாசியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
உடல் இளைக்க வேண்டும் என விரும்புவார்கள் தினமும் உணவில் கொள்ளினை சேர்த்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் காண முடியும்.
கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறியும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும்.
இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து உங்களின் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும்.
மலசிக்கல் பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நார்ச்சத்து குறைபாடு ஆகும். கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
கொள்ளினை தேவைக்கு அதிகமாக உண்டு வந்தால், உடல் சூடு போன்ற பிரச்சினை ஏற்படும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். எனவே கொள்ளினை அளவோடு உண்டு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கலாம்.