1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல் ஆரோக்கியத்துக்கு சீன உப்பு ஏற்படுத்தும் ஆபத்துக்கள்...!!

சீன உப்பு அல்லது எம்.எஸ்.ஜி என்றழைக்கப்படும் மோனோசோடியம் குளூடாமேட் நாம் சாப்பிடும் ரெடிமேட் உணவுகளில் எல்லாம் கலந்திருக்கும் முக்கியமான கலவையாகும். முன்னதாக இந்த சீன உப்பை சைனீஸ் உணவுகளில் மட்டுமே கலக்கப்பட்டு வந்து. ஆனால், இன்றைய நாட்களில் சீன உப்பு கலக்காத உணவுகளே இல்லை என்ற நிலை வந்து விட்டது.
சீன உப்பினால் ஏற்படக் கூடிய சாதாரண பிரச்சனைகளில் ஒன்றாக தலைவலி உள்ளது. இது தலைவலியை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்த நிலையை அடிக்கடி அனுபவிக்கச் செய்து விடும்.

சீன உப்பினால் மூளை மட்டுமின்றி இரைப்பை, சிறுகுடல், கல்லீரல் போன்ற உறுப்புகளிலும் அழற்சியையும், சிறு ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்றுவலி அடிக்கடி ஏற்படும்.
 
சீன உப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் நரம்புகளும் பாதிக்கப்படுகின்றன. முகம் மற்றும் கழுத்துப் பகுதிகள் மரத்துப் போதல்,  கூச்சம் அல்லது எரிச்சல் போன்ற உணர்வுகள் வருவதற்கு சீன உப்பு காரணமாக இருக்கும்.
 
சீன உப்பை சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் படபடப்பு ஏற்படவும், இதயப் பகுதியில் வலி ஏற்படவும் மற்றும் இதயம் அடைத்துக்  கொள்ளவும் கூடும்.
 
சீன உப்பினால் உயர் இரத்த அழுத்தம், அடிவயிற்றில் பிரச்சனைகள், தைராய்டு செயல்பாட்டில் குறைபாடுகள், டை-2 நீரிழிவு  நோய், உடற்பருமன், ஆஸ்துமா, ஹார்மோன் சமநிலையற்ற நிலை, மன இறுக்கம், சாப்பாடு அலர்ஜியாதல் மற்றும் கண்களின் விழித்திரை  பாதிப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.