1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (10:36 IST)

சிறந்த மருத்துவகுணம் நிறைந்த ஜாதிக்காய் !!

ஜாதிக்காய் பசியின்மையை போக்கும் ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்ததாகும். பெரும்பாலும் இது நிறைய நாட்டு மருந்துகளில் கிடைக்கிறது.


ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள  தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது விரைவில் மறையும். முகம் பொலிவடையும். ஜாதிக்காயை அரைத்து பசை போல செய்து தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் தடவி வந்தால் சரும வியாதிகள் மறையும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி 5 கிராம் அளவு சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும், நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

ஜாதிக்காய், சுக்குத்தூள் இரண்டையும் சம அளவு எடுத்து, அதற்கு இரண்டு பங்கு சீரகத்தைச் சேர்த்துப் பொடி செய்து, உணவுக்கு முன்னதாக சிறிது சாப்பிட்டு வந்தால், வயிற்றில் ஏற்படும் வாயுத்தொல்லை மற்றும் அஜீரணம் நீங்கும்.

ஜாதிக்காய் நரம்பு மண்டலத்தை தூண்டுவதால், மனநோய்க்கும், மனதை உற்சாகப்படுத்தவும், நினைவாற்றலைப் பெருக்கவும், மனதை பரபரப்பிலிருந்து விடுவிக்கவும் ஜாதிக்காய் உதவும்.

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதிலும், வெள்ளை அணுக்களில் ரத்தப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கவும் ஜாதிக்காய் சிறப்பாக செயலாற்றுவதாக ஆய்வுகள் தெரிவிகின்றன.