புதன், 13 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : புதன், 5 ஜனவரி 2022 (09:40 IST)

சிறியாநங்கை இலையின் அற்புத மருத்துவ குணங்கள் !!

சிறியாநங்கையின் இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


அதை ஒரு வடிகட்டி மூலம் அதில் உள்ள திப்பிகளை நீக்கி அந்த சாற்றை மட்டும் எடுத்து மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
சிறியாநங்கை வேருடன் அருகம்புல் வேரையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிட்டு வந்தால் தேமல் தொடர்பான பிரச்சினைகள் குணமாகும். இந்த மருந்து சாப்பிடும்போது உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.
 
பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும்.
 
புகைப்பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் ஏற்படும் கெட்ட கழிவினை சுத்தப்படுத்த இந்தச் சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 3. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பூச்சிக்கடி வயிற்றுப்போக்கு இந்தப் பிரச்சினைகள் நீங்க பயன்படுத்தப்படுகிறது.
 
மஞ்சள் காமாலை, மலேரியா விஷக் காய்ச்சல் போன்ற நோய்களை குணமாக்குகிறது. சைனஸ் மற்றும் சளி தொந்தரவால் ஏற்படும் பிரச்சனைகளையும் இது நீக்குகிறது. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கு இது ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. 
 
உடலிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய கெட்ட தேக்கங்கள் அனைத்தும் உள்ளேயே சேர்ந்து விடுவதால் பெண்களுக்கு கர்ப்பப்பையில் கட்டிகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கர்ப்பப்பையில் இருக்கும் நீர் கட்டிகள், கொப்பளங்கள், பூச்சிகள் நீங்கவும், இவைகள் வராமல் தடுக்கவும் இந்தச் சாறு பயன்படுத்தப்படுகிறது.