1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (15:13 IST)

மூச்சு திணறல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரும் தாளிசாதி சூரணம் !!

Talisadi Churna
வாதம், கபம், பித்தம் போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை குணமாகும் வல்லமை தாளிசாதி சூரணத்திற்கு உண்டு.


நாள்பட்ட சளி, நுரையீரல் சளி, இருமல், ஆஸ்துமா போன்றவற்றால் சிரமப்படுபவர்களுக்கு தாளிசாதி சூரணம் சிறந்த தீர்வாகும்.

மூச்சு திணறல் பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். காது இரைச்சல், மூக்கில் இருந்து நீர் வடிதல், தலை பாரம், நீர்க் கோவை போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தாளிசாதி சூரணம் எடுத்து வந்தால் விரைவில் இவற்றிலிருந்து விடுபடலாம்.

வயிற்று எரிச்சல் உள்ளவர்கள் இதை சிறிது நாட்கள் எடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். பசியின்மை, அஜீரணம், வயிறுப்புண், அல்சர் போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி தாளிசாதி சூரணத்திற்கு உண்டு.

வயிற்று வலி பிரச்சனை உள்ளவர்கள் இதை தொடர்ந்து எடுத்து வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். சளி, இருமல் போன்றவற்றால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தும்.

மஞ்சள் காமாலை நோயையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது. வெள்ளைபடுதலை தடுக்கும்.