1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 24 ஜூன் 2022 (11:56 IST)

எலும்பு பகுதியில் உள்ள வாயுவை விரட்டும் பெருங்காயம் !!

asafoetida
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது அவ்வப்போது காய்ச்சல் மற்றும் ஒரு சில உடல் உபாதைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் வராமல் தடுத்து வைரஸ் கிருமிகளை எதிர்த்து போராட கூடிய சக்தி பெருங்காயத்தில் உள்ளது.


பெருங்காயம் நரம்பு கோளாறுகளை நீக்குவதிலும் பயன்படுகிறது. பெருங்காயம் நரம்பு கோளாறுகளை நீக்குவதிலும் பயன்படுகின்றது. குறிப்பாக சிலருக்கு நெஞ்சு, முதுகு ஆகிய இடங்களில் வலி உண்டாகும். இது வாயுவால் உண்டாகும் வழியாகவும் இருக்கலாம். இந்த எலும்பு பகுதியில் இருக்கும் வாயுவை விரட்டி பலம் சேர்க்கவும் பெருங்காயம் உதவுகின்றது.

பெண்களுக்கு மாதவிடாயினால் ஏற்படும் பிரச்சனைகளான வயிற்று வலி, சதை பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்குக் காலம் மற்றும் சூதகவாய்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது.

சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது.

பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச் சளி போன்றவைகள் குணமாகும்.

பெருங்காயம் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.