Daily Horoscope
✕

கோடைக்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள் தயரிப்பது எப்படி?

Updated: சனி, 23 மார்ச் 2019 (15:05 IST)
 
2. மாதுளை ஜூஸ்
தேவையானவை: மாதுளம் பழம் - 1, சர்க்கரை - 100 கிராம், தேன் - 2 டீஸ்பூன், பால் - ஒரு கப்.
 
செய்முறை: மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு  முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம். குறிப்பு:  இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.
 
3. ஜிஞ்சர் மோர்
தேவையானவை: மோர் - 500 மில்லி, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு,  பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை: இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பு: இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!

எல்லாம் காட்டு

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments