1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Sukku gives relief for all Stomach Problems !!

வயிற்று பிரச்சனைகள் அனைத்திற்கும் நிவாரணம் தரும் சுக்கு !!

சுக்கு
இஞ்சியை நன்றாக காயவைத்த பின், அதில் உள்ள நீர் வற்றிய நிலையில் இருப்பது தான் சுக்கு. சுக்கு எளிதில் கெடாது. ஆனால் ஆரோக்கியத்திற்கு தேவையான நன்மைகள் அனைத்தும் இதில் உள்ளது.


சுக்கு எந்த வகையான உணவையும் செரிமானம் அடைய செய்துவிடும். உடலில் உள்ள நச்சுக்களை முறித்து வெளியேற்றும். குடல்களையும், உணவுப் பாதையையும் சுத்தமாக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சுக்குத் தூள் போட்டு நன்றாக கொதிக்கவைத்து, அதை வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகி வந்தால் மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், மூட்டு வலி குணமாகும்.

வயிற்றில் எரிச்சல் ஏற்படும்பொழுது, அதனை சரிசெய்ய, கரும்பு சாறுடன் சிறிதளவு சுக்கு பொடியை சேர்த்து, தினமும் காலையில் எழுந்ததும் குடித்து வந்தால், வயிற்றுப் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

சுக்குத் தூளை பயன்படுத்தி டீ போட்டு குடித்தால், இருமல் தொல்லையிலிருந்து விடுபட உடனடி நிவாரணம் கிடைக்கும்.

ஒரு டம்ளர் நீரில் அரை டீஸ்பூன் சுக்கு பொடியை கலந்து வெதுவெதுப்பாக சூடுபடுத்தி அதில் தேன் சேர்த்து, அதனை தினமும் குடித்து வந்தால், தொப்பையின் அளவை குறைத்து, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
உடல் ஆரோக்கித்திற்கு இன்றியமையாத கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ள நல்லெண்ணெய் !!