1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Suitable for physical health; To do Mudakathan Thuvaiyal !!

உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முடக்கத்தான் துவையல் செய்ய !!

முடக்கத்தான் துவையல்
தேவையான பொருட்கள்:
 
முடக்கத்தான் கீரை - 2 கைப்பிடி அளவு
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
காய்ந்த மிளகாய் - 5
இஞ்சி - சிறு துண்டு
சீரகம் - அரை தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு, உளுந்து - ஒரு தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிதளவு

செய்முறை:
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, பூண்டு, காய்ந்த‌ மிளகாய், இஞ்சி, சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சுத்தம் செய்த‌ முடக்கத்தான் கீரையை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப‌ உப்பு சேர்த்து ஆற‌ வைக்கவும்.
 
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து அரைத்த‌ விழுது சேர்த்து பெருங்காய‌ பொடி சேர்த்து நன்கு கிளறவும். தேவைப்பட்டால்  இடையிடையே எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் பிரியும் வரை நன்கு கிளறி இறக்கவும். சத்தான‌ உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற முடக்கத்தான் துவையல் தயார்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடைய குப்பைமேனி இலை !!