செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மண்பாண்டத்தில் சமைப்பதால் என்ன நன்மைகள் தெரியுமா...?

மண்பாண்டத்தில் சமைப்பதால், வெப்பம் சீராக பாத்திரம் முழுவதும் பரவுகிறது. மேலும், நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மை மண்பாண்டங்களுக்கு இருப்பதால், உணவு சூடாகவே இருக்கும். அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் போகாது. 

மண்பாண்டத்தில் முழுவதும் வெப்பம் மெதுவாகப் பரவுவதால், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அப்படியே நிலைத்திருக்கின்றன. இதுவே மண்பாண்டத்தில்  சமைக்கப்படும் உணவு கூடுதல் சுவையுடன் இருப்பதற்கு முக்கியக் காரணம்.
 
மண்பாண்டங்களில் ஆல்கலைன்கள்  நிறைந்துள்ளன. இவை தண்ணீரின் அமிலத்தன்மையோடு இணைந்து, உடலின் pH தன்மையை சமன் செய்கிறது. நீரில்  அமிலத்தன்மை சமன் செய்யப்படுவதால், வாயுத்தொல்லைகள் நீங்கும்.
 
மண்பாண்டங்களில் சேமிக்கப்படும் தண்ணீரைப் பயன்படுத்துவது ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. மேலும், தசைகள் வளர்ச்சி, எலும்புகள்  மண்டலத்தை உறுதியாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியக் காரணியாகச் செல்படும் டெஸ்டோஸ்டெரோன் அளவை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது.
 
மண்பாண்டத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரைப் பருகுவது, சன் ஸ்டோக்கில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது. மற்றொரு நன்மை என்னவென்றால், தொண்டையில் நோய் தொற்று உள்ளவர்கள் இதனைப் பருகுவதால், தொற்று நீங்கி குணமடைவர். வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்கள் நம்மைத் தாக்காமல் இருக்க மண்பாண்டங்களே சிறந்தவை.
 
பலவித நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள உதவும் மண்பாண்டங்கள், கோடை காலத்திற்கு மட்டுமல்ல, எல்லா காலங்களுக்கும் ஏற்றது.