செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இயற்கையான முறையில் சளிக்கு தீர்வு காண சில குறிப்புகள் !!

பலருக்கு சளி என்பது நீக்க முடியாத பெரிய பிரச்சனையாக உள்ளது. அவ்வாறு சளி உள்ளவர்கள் வெதுவெதுப்பான பாலில் தேன், மஞ்சள் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இது நெஞ்சு சளியை நீக்கும் ஆற்றல் கொண்டது. 
 

மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிருமிகளை அழிக்க உதவும். மிளகு செரிமானத்திற்கும், இருமல் மற்றும் சளியில் இருந்து  நிவாரணம் அளிக்கும். காலை மாலை என இதை இரண்டு வேளை குளிப்பது நல்ல பலனளிக்கும்.
 
சளி, இருமல் வந்துவிட்டால் தண்ணீரை சூடாக்கி குடிப்பதுடன் கொதிக்கும் நீரில் 2 மேசை கரண்டி சுக்கு தூளுடன் கால் மேசைக் கரண்டி எலுமிச்சை சாறு, 1  மேசை கரண்டி தேன் கலந்து பருகினால் நன்று.
 
சளிப்பிரச்சினைகளால் தொடர்ந்து இருமல் மற்றும் சுவாசக்கோளாறுகள் வந்து சிரமப்படுவார்கள், 1 தேக்கரண்டி ஏலக்காய் பொடியுடன் நெய் கலந்து சீரகத்தை நன்கு  பொடி செய்து தினமும் 2 வேளை சாப்பிட்டால் மார்புச் சளி நீங்கும். 
 
தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி நெஞ்சில் தட வேண்டும். இது நெஞ்சு சளியைப் போக்கும்.
 
பூண்டை நன்றாக நசுக்கி குழம்பு அல்லது சூப்பில் போட்டும் பயன்படுத்தலாம். சளி, இருமலை இயற்கைவழியில் நீக்கும். சிறு வெங்காயம் சாறு, தேன், இஞ்சி சாறு  மூன்றையும் சம அளவாக கலந்து தினமும் ஒரு வேளை சாப்பிட வேண்டும். இரு தினங்களில் சளி நீங்கும்.