1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 17 பிப்ரவரி 2022 (14:34 IST)

அடிக்கடி வெற்றிலை சாப்பிட்டு வருவதால் இத்தனை நன்மைகளா....?

சளி தொந்தரவுகளால் சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கும், ஆஸ்துமா நோய் இருப்பவர்களுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்க வல்லது வெற்றிலை.


நுரையீரலில் சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படும் காலங்களில் ஒன்றிரண்டு வெற்றிலைகள் எடுத்து, அதில் கடுகு எண்ணெய் தடவி நெருப்பில் காட்டி நெஞ்சில் சிறிது நேரம் வைத்து எடுத்து வர சுவாசிப்பதில் இருக்கின்ற சிரமங்கள் நீங்கி நன்கு சுவாசிக்க முடியும்.

தொற்று கிருமிகளால் நோய்கள் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சில துளிகள் வெற்றிலை சாறுகளை அருந்துவது அந்நோய்க்கிருமிகள் அழிய உதவும்.

வெற்றிலைகள் அவ்வப்போது சாப்பிட்டு வருவதால் அந்த வெற்றிலையில் இருக்கும் இயற்கையான அமிலங்கள் வயிறு, குடல் போன்றவற்றில் இருக்கும் நச்சுகள், அழுக்குகள் போன்றவற்றை நீக்கி, உணவு செரிமானம் செய்யும் திறனை அதிகரிக்கிறது.

காயங்கள், ஆறி வரும் புண்கள் போன்றவற்றிலும் வெற்றிலை சாறுகளை விட்டு வர அதிலிருக்கும் கிருமிகள் அழியும், வலி எரிச்சல் போன்றவற்றை குறைக்கும்.

வெற்றிலை சாற்றை அவ்வப்போது பருகி வந்தால் சிறுநீர் சம்பந்தமான உறுப்புகளில் இருக்கும் நச்சுகள் நீங்கும். சிறுநீர் அதிகளவு பெருகி சீரான கால இடைவெளியில் சிறுநீர் கழிக்கச் செய்து, உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

வெற்றிலைகளை நெற்றியில் வைத்து, ஒரு துணியால் கட்டிக்கொண்டு தூங்கினால், மீண்டும் எழுந்திருக்கும் போது தலைவலி முற்றிலும் நீங்கியிருக்கும்.