கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும் கிவி பழம் !!
கிவி பழம் இரத்த உறைதலைத் தடுக்கவும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
இரத்த கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதால், மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
கிவி பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், கிவி பழத்தை தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது.
கிவி பழம் சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
கிவி பழம் ஆஸ்துமாவை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது. கிவி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம், இரவில் வரும் வறட்டு இருமல் போன்றவற்றை சரிசெய்ய உதவும்.
கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் மாகுலர் திசு சிதைவைத் தடுக்கிறது, முதுமை காலத்தில் ஏற்படும் பார்வை இழப்பு அபாயத்தைத் தடுக்கும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கும்.