1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

தோல் வியாதிகளை குணப்படுத்தும் மருதாணி...!

மருதாணி நரைத்த முடியை கலரிங் செய்வதற்காகவும் இதனை ஒரு அழகு சாதனமாகவும் பயன்படுத்துகின்றனர். மருதாணி குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை  கொண்டது. 
மருதாணி இலைகளை வீங்கிய பகுதியில் தடவி, அதனை காயவிட்டால் வீக்கம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். இரவு தூங்கும்போது மருதாணி பேஸ்ட்டை பாதத்தில் தடவினால் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
 
இந்த பேஸ்ட்டை தலை முடியில் தடவினால் பொடுகு குறைந்து தலைமுடியை மென்மையாக்கி, பளபளப்பை உண்டாக்கும். மேலும் நரை முடியை மறைப்பதற்காகவும் பயன்படுத்தலாம்.
 
மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். மருதாணி இட்டுக் கொண்டால் சளி பிடித்து விடும் என்பவர்கள், இதனுடன்  7 அல்லது 8 நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம்.
கால், கை இடுக்கிலும், கழுத்துப்பகுதியிலும், இடுப்பிலும் வரக்கூடிய கரும்படை, வண்ணான் படை போன்ற படைகளை மருதாணியை கொண்டு குணப்படுத்த  முடியும்.
 
ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம். மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து.